கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் மழைகாரணமாக செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய நடிகை

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் மழைகாரணமாக செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய நடிகை

பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் பிரபல நடிகை கிறிஸ்டன் ஸ்டிவார்ட் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு ஓடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரான்சில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட், ஹாலிவுட்டில் இருக்கும் நடிகர், நடிகையர் பலர் கலந்துக் கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த கேன்ஸ் பட விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டிவாட் சிவப்பு கம்பள வரவேற்பின் போது அவர் க்ரேப் நிற ஆடையில் நீளமான காலணிகளை அணிந்து வந்திருந்தார்.

அப்போது திடீரென்று அங்கு மழை பெயததால், சற்றும் இதை எதிர்பார்க்காத அவர் முதலில் ஓட முயற்சித்தார்.

அப்போது தான் அணிந்திருக்கும் காலணியால் நாம் விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் உடனே, தனது காலில் அணிந்திருந்த காலணிகளை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினார்.

இதைக் கண்ட அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வீடியோ மர்றும் புகைப்படம் எடுத்தனர்.

இது போன்ற பெரிய நிகழ்ச்சியில், யாரும் எதிர்ப்பார்க்காமல் செருப்பை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு கிறிஸ்டன் ஸ்டிவார்ட் ஓடியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் - Editor