தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் நிரூபித்துவிட்டார் : அஸ்வின்

தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் நிரூபித்துவிட்டார் : அஸ்வின்
தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் நிரூபித்துவிட்டதாக பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின, இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்தார், எனினும் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களே எடுத்ததால், 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கூறுகையில், இந்த நேரம் ஒன்றும் தோன்றவில்லை, மனம் வெறுமையாக இருக்கிறது, நாங்கள் சிறப்பாகவே Chasing செய்து கொண்டிருந்தோம், இந்தப் போட்டியில் தொழில்முறை துடுப்பாட்ட செயல்பாட்டைக் காட்டினோம்.

இருந்தாலும் இறுதியில் அது எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை, இதற்கான புகழ் பும்ராவையே சேரும், தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார், இந்தத் தோல்வியை அடுத்து அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறோம்.

கடந்த போட்டியில் எங்கள் செயல்பாடு பற்றி வீரர்களுடன் விவாதித்தோம், அதையடுத்து இந்தப் போட்டியில் நன்றாகவே விளையாடினோம்.

ராகுலும், ஆரோன் பின்ச்சும் சிறப்பாக செயல்பட்டனர், கடைசி கட்டத்தில் ராகுல் செய்தது தவறா? சரியா? என்பது பற்றி கூறுவது கடினம் என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor