நான்கு இளைஞர்களை கொலை செய்து தனது வீட்டு நிலத்தில் புதைத்த நபர்

நான்கு இளைஞர்களை கொலை செய்து தனது வீட்டு நிலத்தில் புதைத்த நபர்

அமெரிக்காவில் நான்கு இளைஞர்களை கொலை செய்து தனது வீட்டு நிலத்தில் புதைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Pennsylvania மாகாணத்தை சேர்ந்தவர் கோஸ்மோ தினர்டோ (21). கஞ்சா விற்பனை செய்து வந்த கோஸ்மோ அது சம்மந்தமாக கடந்த யூலை மாதம் நான்கு இளைஞர்களை சந்தித்துள்ளார்.

ஜிமி பேட்ரிக், டீன் பினோர்சிரோ, தாமஸ் மியோ, மார்க் ஸ்டுர்கிஸ் என பெயருள்ள அந்த நால்வருடனும் கோஸ்மோவுக்கு திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில் அவர்களை சுட்டு கொன்றுள்ளார்.

பின்னர் நால்வரின் சடலங்களையும் தீயிட்டு எரித்த கோஸ்மோ அதை உலோக பெட்டியில் போட்டு தனது வீட்டு நிலத்தில் புதைத்துள்ளார்.

இதையடுத்து நால்வரும் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் தரப்பட்ட நிலையில் மோப்ப நாய்கள் உதவியுடன் சடலங்களை பொலிசார் கண்டுப்பிடித்து கோஸ்மோவை கைது செய்தனர்.

கோஸ்மோ மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor