பிக் பாஸ் 2-க்கு தயாரான

பிக் பாஸ் 2-க்கு தயாரான

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விஜய் டிவி-யின் டி.ஆர்.பி-யை தாறுமாறாக வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான பிரபலங்கள் சமூகத்தின் தங்களின் பெயரை கெடுத்து கொண்டனர். ஓவியா, பரணி, ஹரிஷ் என ஒரு சில புகழின் உச்சத்திற்கு சென்றனர்.

தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது. இதையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த சீசனில் கலந்து கொண்டு பலி கடாவாக போகும் பிரபலங்கள் யாராக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கல்யாணம் முதல் காதல் வரை எந்த சீரியலின் மூலம் பிரபலமான அமித் பார்கவ் பிக் பாஸ் 2-க்கு அழைத்தால் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் தானா வந்து தலையை கொடுக்கறீங்களே, பச்ச மண்ணுயா நீ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor