தளபதி நாயகியை பார்த்து வியந்த ரசிகர்கள்

தளபதி நாயகியை பார்த்து வியந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகையான இலியானா. இந்த படத்தை அடுத்து தளபதி விஜயுடன் நண்பன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

ஒல்லியாக இஞ்சி இடுப்பழகியாக வலம் வந்த இவர் சமீபத்தில் உடல் எடையை கூட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்ட்ராகிராம் கருப்பு நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் மிகவும் அழகாக உள்ளதாக அவரது ரசிகர்கள் வியப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor