கண் பார்வையை பாதுகாக்க இதை செய்யுங்க

கண் பார்வையை பாதுகாக்க இதை செய்யுங்க

எந்த உயிராக இருந்தாலும் வாழும் வாழ்க்கைக்கு முக்கியமானது கண். கண் பார்வைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பாதுகாக்க சில பயிற்சிகளை பின்பற்றினாலே போது ஆரோக்கியமாக வாழலாம்..

பாமிங் (Palming)

ஒரு மேசைமீது முழங்கையை ஊன்றி இரு கைகளை மூடியபடி பல முறை பொத்தி பொத்தி எடுத்து வந்தால் கண்களில் ஏற்படும் களைப்பு நீங்கும்.

சூரியஒளி

காலை மற்றும் மாலை நேரங்களில் கண்களை லேசாக மூடிக்கொண்டு சூரியஒளி முகத்தில் படும்படி சிறிது நேரம் நின்று வரலாம்.

ஷிஃப்டிங் (Shifting)

முகத்தை திருப்பாமல் கண்களை மட்டும் இடது, வலப்பக்கமாகவும், மேலும், கீழும் அசைத்து வந்தால் கண்ணில் இருக்கும் நுண்ணிய தசைகள் உறுதியாகும்.

கூர்மையான கண்பார்வை

அருகில் இருக்கும் ஒரு பொருளை சில நொடிகள் உற்றுப் பார்த்தும். பின் தூரத்தில் ஒரு பொருளைப் பார்த்தும், கழுத்துப் பகுதி பார்வைக்குச் சமமான நிலையில் இருக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள பொருளைத் தான் பார்க்க வேண்டும்.

மசாஜ்

இரு கண்களை மூடி விரல்களை வைத்து லேசாக மசாஜ் செய்தும், மனதில் எட்டு என்ற எண்னை கண்களின் முன்னே கற்பனையோடு நினைத்து எட்டை கண்களால் வரைந்து வரலாம்.

ஆசிரியர் - Editor