புற்றுநோய் வராமல் தடுக்க

புற்றுநோய் வராமல் தடுக்க

உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள்.

இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் அதிக பலன்கள் இருக்கிறது. அவற்றில் சில,

புற்றுநோய்

துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய்

வராமல் தவிர்க்க உதவுகிறது. இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.

சர்க்கரை நோய்

துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும்

பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.

இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.

இதயம்

இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.

மன அழுத்தம்

இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.

துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

ஆசிரியர் - Editor