பட்டர் இறால் முட்டை மசாலா

பட்டர் இறால் முட்டை மசாலா

சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா, எளிய பட்டர் இறால் முட்டை மசாலா, பட்டர் இறால் முட்டை மசாலா செய்யும் முறை, பிரபலமான பட்டர் இறால் முட்டை மசாலா, பட்டர் இறால் முட்டை மசாலா செய்முறை, பட்டர் இறால் முட்டை மசாலா சமையல் குறிப்புகள், பட்டர் இறால் முட்டை மசாலா செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் பட்டர் இறால் முட்டை மசாலா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
பட்டர் – 2/3 தேக்கரண்டி
வெங்காயம் (பெரியது) – 2
இறால் – ஒரு கப்
பட்டை – சிறிது
வேக வைத்த முட்டை – 4
கிராம்பு – ஒன்று
சோம்பு – சிறிது
தக்காளி (பெரியது) – 2
ப்ரிஞ்சி இலை – ஒன்று
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
உணவு செய்முறை : பட்டர் இறால் முட்டை மசாலா
Step 1.
முதலில் இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .பின் வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவேண்டும் .

Step 2.
பின் வாணலியில் பட்டர் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் ப்ரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும் .

Step 3.
பிறகு வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, இறாலைச் சேர்த்து வதக்கவும்.

Step 4.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவேண்டும் .

Step 5.
பிறகு இறால் வெந்ததும் சோயா சாஸ் ஊற்றிக் கிளறவும்.பின் மசாலா திக்கானதும் அதனுடன் முட்டைகளை குறுக்காக வெட்டிப் போட்டு நன்கு பிரட்டி இறக்கவும்.

Step 6.
சுவையான பட்டர் இறால் முட்டை மசாலா தயார். சாத்தில் போட்டுச் சாப்பிட அல்லது சப்பாத்தி, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஆசிரியர் - Editor