செட்டிநாடு வெள்ளை அப்பம்

செட்டிநாடு வெள்ளை அப்பம்

சுவையான செட்டிநாடு வெள்ளை அப்பம், எளிய செட்டிநாடு வெள்ளை அப்பம், செட்டிநாடு வெள்ளை அப்பம் செய்யும் முறை, பிரபலமான செட்டிநாடு வெள்ளை அப்பம், செட்டிநாடு வெள்ளை அப்பம் செய்முறை, செட்டிநாடு வெள்ளை அப்பம் சமையல் குறிப்புகள், செட்டிநாடு வெள்ளை அப்பம் செய்வது எப்படி.

 உங்கள் சுவையை தூண்டும் செட்டிநாடு வெள்ளை அப்பம் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான செட்டிநாடு வெள்ளை அப்பம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!


சமைக்க தேவையானவை
பச்சரிசி – 2 கப்
உளுத்தம்பருப்பு – 1 /2 கப்
சமையல் சோடா – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – 1 (பால் எடுத்துக் கொள்ளவும்)
எண்ணெய் – தேவையான அளவு
உணவு செய்முறை : செட்டிநாடு வெள்ளை அப்பம்
Step 1.
முதலில் அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைக்கவும்.பின் மாவை நன்றாக நுரைக்க அரைத்துக் கொள்ளவும்.

Step 2.
பிறகு மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால், சமையல் சோடா இவற்றை ஒன்றாக சேர்க்கவும். பின் ஒரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

Step 3.
பிறகு மிதமான சூட்டில் வைத்து ஒரு சிறிய கரண்டி அளவு மாவை எடுத்து அப்பம் போல ஊற்றவும். அப்பம் எண்ணெயில் மேலே மிதந்ததும் வெள்ளையாக இருக்கும் பொழுதே திருப்பி போடவும்.

Step 4.
இரண்டு புறமும் ஒரே மாதிரி வெந்தவுடன் எடுத்து விடவும். பின் எல்லா மாவையும் இதே போல் சிறிய அப்பங்களாக ஒன்று ஒன்றாக சுட்டு எடுக்கவும். அப்பம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

ஆசிரியர் - Editor