அணு ஆயுதங்களை அகற்ற காலக்கெடு விதித்த அமெரிக்கா

அணு ஆயுதங்களை அகற்ற காலக்கெடு விதித்த அமெரிக்கா

சில அணு ஆயுதங்களை வட கொரியா தன் நாட்டைவிட்டு ஆறு மாதங்களுக்குள் அகற்றவேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்று வரும் திரை மறைவு பேச்சு வார்த்தைகளின் ஒரு பகுதியாக வட கொரியா தனது ஆயுதங்களில் ஒரு பகுதியை அகற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதையடுத்து தென் கொரியாவுடனான பேச்சு வார்த்தைகளிலிருந்து வட கொரியா பின் வாங்கியுள்ளதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோல் ஜூன் 12 அன்று நடைபெறுவதாக இருந்த உலகமே பெரிதும் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் சந்திப்பும் கைவிடப்படலாம் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க பேச்சு வார்த்தை யுக்திகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்றும் ஆபத்துக் காலங்களில் வட கொரியா நிராயுதபாணியாக விடப்படாது என்னும் உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படாமல் வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்கும் ஒருதலைபட்சமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விரும்பவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இரண்டு கொரிய அதிபர்களும் இணைந்து பேச்சு வார்த்தைகள் நடத்திய நிலையில் கொரிய தீபகற்பத்தில் அமைதி ஏற்படும் என பலரும் எதிர்பார்த்திருக்க தற்போதைய சூழல் அமைதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor