காசா பகுதியை துவம்சம் செய்த இஸ்ரேல்

காசா பகுதியை துவம்சம் செய்த இஸ்ரேல்

காசா எல்லையிலிருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Sderot என்னும் இஸ்ரேலிய கிராமத்தின் மீது ஹமாஸ் அமைப்பு இயந்திரத்துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு வீடுகள் பாதிப்புக்குள்ளானதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தொடர்ச்சியாக வான் வழித்தாக்குதல் நடத்தியது.

நான்கு ஹமாஸ் ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகின, இது தவிர ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூன்றும் தாக்குதலில் சேதமடைந்தன.

காசா வெளியிட்ட வீடியோ ஒன்று மக்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதி ஒன்றுதாக்குதலுக்குள்ளானதைக் காட்டுகிறது.

காசா நடத்திய ஏராளமான துப்பாக்கிச் சூடுகளே பலத்த பதிலடி கொடுக்கத் தூண்டியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காசாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்ரேல் மக்களையும் இஸ்ரேலின் இறையாண்மையையும் இலக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் ஹமாஸ் அமைப்புதான் காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பு உணர்வையும் உறுதிப்படுத்தும் இலக்கை நிறைவேற்ற இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளது என இஸ்ரேல் கூறியுள்ளது.

2014 முதல் நடைபெற்றுவரும் இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்சனைகளில் இம்முறை ஏற்பட்ட உயிரிழப்பே பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor