வரதட்சணை கொடுமையால் தீயில் கருகிய தாயும், மகளும்

வரதட்சணை கொடுமையால் தீயில் கருகிய தாயும், மகளும்

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தாயும், மகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் அருகே நகப்பால் பகுதியை சேர்ந்தவர் பிஜூ, இவருக்கு தாரா என்ற மனைவியும், அமேகா(வயது 6) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று மாலை பிஜூ வெளியே சென்றிருந்த போது, மகளுடன் மேல் மாடிக்கு சென்றுள்ளார் தாரா.

சற்று நேரத்தில் வீட்டிலிருந்து புகை வரவே, பதறித்துடித்த அக்கம்பக்கத்தினர் தாராவின் வீட்டுக்கு சென்றனர்.

கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியே பார்த்த போது தாராவும், அமேகாவும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த பொன்னானி பொலிசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிஜூ கடந்த இரண்டு ஆண்டுகளாக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததும், இதன் காரணமாக இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தாராவின் தந்தை தெரிவித்துள்ளார், பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

ஆசிரியர் - Editor