லா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி!

லா லிகா: அலவ்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ரியல் மட்ரிட் அணி வெற்றி!

லா லிகா கால்பந்து தொடரின், அலவ்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது.

அல்ஃபிரடோ டி ஸ்டெபனோ விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 11ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கரீம் பென்ஸிமா தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து, போட்டியின் 51ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியின் மற்றொரு வீரரான, மக்ரோ அஸன்ஸியோ இரண்டாவது கோலை அடித்தார்.

மேற்கொண்டு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது.

லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில், ரியல் மட்ரிட் அணி 80புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது. அலவ்ஸ் அணி 35 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தில் உள்ளது.

ஆசிரியர் - Editor II