ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்தி வைப்பு – ஜான்டி ரோட்ஸ்

ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்தி வைப்பு – ஜான்டி ரோட்ஸ்

ஐபிஎல் 2020 சீசன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த வருடத்தை கடந்து செல்வதை நினைக்கவே கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கூறுவாதவது, 2008-ல் இருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஐபிஎல் போட்டி ஒரு அங்கமாக இருந்தது.

மிகப்பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.

ஐபிஎல் போட்டி நிதி மற்றும் எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் மிக முக்கியமானது, உலகின் சிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள்.

அதனால் ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம். என்னைப் பொறுத்த வரைக்கும் ஐபிஎல் இல்லாத கிரிக்கெட் அட்டவணை அர்த்தமற்றது” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II