இலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் துருக்கியில் தடுத்து வைப்பு

இலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் துருக்கியில் தடுத்து வைப்பு

இலங்கையர்கள் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேறிகள் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள் அற்ற அவர்கள், துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஈராக் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சிரியாவில் சிவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் குடியேறிகளுக்கு துருக்கி பிரதான வழியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் - Sellakumar