கடற்படை சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்

கடற்படை சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்

கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று(17) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய லெப்டினன் கொமாண்டர், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அவர் தற்போது நாட்டிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, விடயங்களை ஆராய்ந்த நீதவான், சிவப்பு அறிவித்தலை சர்வதேச காவல்துறையினர் ஊடாக செயற்படுத்துவதற்காக ஆங்கில மொழியில் அதனை வெளியிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இரண்டு பேரையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர் - Sellakumar