தக்காளி சீஸ் ரைஸ்

தக்காளி சீஸ் ரைஸ்

தேவையான பொருள்கள் .

பாஸ்மதி அரிசி - 1 கப்

 தக்காளி - 6

துருவிய சீஸ் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முந்திரிப் பருப்பு - 8

புதினா இலை  - 1 கைப்பிடி

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 15 

மிளகுத் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை 

அரிசியை 10, 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடித்து கடாயில் சிறிது நெய் விட்டு அரிசியை வறுத்துக் கொள்ளவும். 

தக்காளியை சுடுதண்ணீரில்  போட்டு தோல் உரித்து மிக்ஸியில்  நன்கு அடித்துக் கொள்ளவும். 

குக்கரில் நெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

அத்துடன் புதினா, முந்திரி, மிளகுத் தூள் மிளகாய்தூள்   சேர்த்து வதக்கி , உப்பு, தக்காளி  சேர்த்து வதக்கி அதனுடன்  2 டம்ளர்  தண்ணீர் ஊற்றி  அதனுடன்    வறுத்த அரிசி சேர்த்து   1 கொதி வந்தவுடன்  நன்கு  கிளரி  உப்பு   பார்த்து  குக்கரை மூடி  அடுப்பை  சிம்மில்   10 நிமிடம்    வைத்து   இறக்கவும். 

 பின் 10 நிமிடம்  கழித்து  குக்கரை திறந்து அதனுடன்  துருவிய சீஸ், புதினா  சேர்த்து  நன்கு கிளரி சூடாக   பரிமாறவும்.

சுவைாயன   தக்காளி சீஸ் ரைஸ்  ரெடி.

ஆசிரியர் - Editor