காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காவிரி மேலாண்மை வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது.

இந்நிலையில் காவிரி நதி நீர் பங்கீட்டை முறைப்படுத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வரை செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில் மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைப்பதாக அறிவித்தது.

மேலும் பருவ காலத்திற்கு முன்பாக வரைவுத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் - Editor