யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளி பேரணி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய உந்துருளி பேரணி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று(18) காலை ஆரம்பமானது.

பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலை சென்றடைந்தது.

வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் உந்துருளிப் பேரணி என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.


ஆசிரியர் - Sellakumar