’அவரைப் பார்த்து ஓடி ஒளிந்தேன்’ கபில் தேவையே மிரள வைத்த அந்த அணித்தலைவர் யார்?

’அவரைப் பார்த்து ஓடி ஒளிந்தேன்’ கபில் தேவையே மிரள வைத்த அந்த அணித்தலைவர் யார்?

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் என என்றென்றும் போற்றப்படுபவர் கபில் தேவ்.

அதுமட்டுமல்லாது இந்திய அணியை திறம்பட வழிநடத்திய அணித்தலைவர்களிலும் ஒருவராக திகழ்கிறார்.

1983இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கிண்ணம் தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

கிரிக்கெட் ஜாம்பவானான கபில் தேவ் அண்மையில் தன்னோடு கிரிக்கெட் விளையாடிய வீரர்களின் நினைவுகளை பகிர்ந்தார்.

1978 – 79 சீசனில் முதன்முதலாக இந்திய அணிக்காக விளையாட வந்தேன். அப்போது மூத்த கிரிக்கெட் வீரராக இருந்த வெங்கடராகவனை நான் பார்த்தாலே மிரண்டு, ஓடி ஒளிந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

பிஷன் பேடி தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீரராக களம் கண்டவர் கபில் தேவ். சுனில் கவாஸ்கர் தலைமையிலான அணியில் நிறைய போட்டிகளை விளையாடியுள்ளார்.

நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளை வெங்கடராகவன் தலைமையில் கபில் தேவ் விளையாடியுள்ளார்.

வெங்கடராகவன் இந்திய அணித்தலைவராக இயங்கிய நாட்கள் எனக்கு கடினமான நாட்களாகவே அமைந்தது என தெரிவித்துள்ளார்.

அவர் அம்பயராக செயல்பட்ட போதும் பவுலர்களிடம் கடிந்து கொள்வார் எனவும் வெளிப்படுத்தியுள்ளார் கபில் தேவ்.

ஆசிரியர் - Editor II