இலங்கை தமிழரை வைத்து வெளிநாட்டில் புதிய ரோபோ கண்டுப்பிடிப்பு!

இலங்கை தமிழரை வைத்து வெளிநாட்டில் புதிய ரோபோ கண்டுப்பிடிப்பு!

இலங்கை தமிழர் ஒருவரை தலைமையாளராக கொண்டு டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தொண்டையில் இருந்து ஒட்டியெடுக்கப்படும் மாதிரிக்கான தானியங்கி ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

உலகின் முதன் முதலாக இந்த தானியங்கி ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வல்லுநர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்பது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் நான்கு வாரங்களில் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தின் சிறந்த ரோபோடிக் ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் முதல் முழுமையான தானியங்கி ரோபோவை உருவாக்குவதில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த ரோபோ தொண்டையில் சரியான இடத்தினை அடைகின்றது. பின்னர் அதிலிருந்து மாதிரியை சேகரிக்கின்றது. அதை தொடர்ந்து இந்த ரோபோ சேகரித்த மாதிரியை கண்ணாடி குடுவைக்குள் வைத்து முத்திரையிட மூடியை திறக்கின்றது.

இந்த நிலையில் ரோபோ எவ்வளவு மென்மையாக தொண்டையில் இறங்குகின்றது என்பது தமக்கே ஆச்சரியமாக இருந்ததாக ஆராய்ச்சி குழுவின் தலைவராக செயற்பட்ட யாழ். வடமராச்சியை சேர்ந்த புலம்பெயர் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை வைத்தியரான Thiusius Rajeeth Savarimuthu தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II