தனது முகபாவனைகளால் அதிக கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை

தனது முகபாவனைகளால் அதிக கிண்டலுக்கு ஆளான பிரபல நடிகை

சீனாவின் பிரபல நடிகை தொலைக்காட்சியில் தனது முகபாவனைகளால் அதிக கிண்டலுக்கு ஆளானதற்கு சமூகவலைதளம் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் சிறந்த ஆசிய நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றவர் சீன நடிகை Angelababy. சீன மக்களின் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் சமீபத்தில் சீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Keep Running என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட போட்டியில், இவர் மீது தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றப்பட்டது. இதனால் நிலைதடுமாறிய இவர், தண்ணீரை பொறுத்துகொள்ள முடியாமல் சற்று வித்தியாசமாக முகபாவனை காட்டியுள்ளார்.

இவரின் இந்த முகபாவனை தொடர்பான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துவந்துள்ளனர். இதனைப்பார்த்த நடிகை அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

நான் ஒரு பெண், மாதவிடாய் காலத்தின் முதல் நாள் எனக்கு. ஒரு பெண் மாதவிடாய் காலத்தின்போது படும் துயரங்கள் அவளுக்கு மட்டுமே தெரியும். நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ஒருங்கிணைப்பாளர்கள் சொல்வதை மறுக்காமல் அப்படி செய்தேன்.

அப்படியும், என் மீது தண்ணீர் ஊற்றுவார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. நேரலை நிகழ்ச்சி என்பதால் என் மீது தண்ணீர் ஊற்றியவுடன் வார்த்கைகளால் எதுவும் கூறமுடியாமல் எனது முகபாவனையால் அதனை வெளிப்படுத்தினேன்.

ஒரு நடிகையாக இருக்கும் என்னை, இப்படி ஒரு முகபாவனையை வைத்து கிண்டல் செய்வது சரியல்ல என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு, 52,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor