ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 781 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் அங்கு இதுவரை இரண்டு இலட்சத்து 4 ஆயிரத்து 964 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 9 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளதாகவும் றோபேர்ட் கொச் மருத்துவ மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 800 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.3 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

அத்தோடு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் மே மாதம் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தப்பட்டது. அத்தோடு கடைகள், பாடசாலைகள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவை படிப்படியாகத் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

ஆசிரியர் - Editor II