ஜேர்மனி- பிரான்ஸ் பயணிகள் மீது தனிமைப்படுத்தல் விதி நடைமுறைப்படுத்தப்படுமா?

ஜேர்மனி- பிரான்ஸ் பயணிகள் மீது தனிமைப்படுத்தல் விதி நடைமுறைப்படுத்தப்படுமா?

கொரோனா வைரஸ் (கொவிட்-19) விவகாரம் தொடர்பாக, ஜேர்மனி மற்றும் பிரான்ஸின் நிலைமையை பிரித்தானிய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாக, இளநிலை சுகாதார அமைச்சர் ஹெலன் வாட்லி (Helen Whately) தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினிலிருந்து திரும்பும் பயணிகள் மீது பிரித்தானியா திடீரென இரண்டு வார கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் விதியை கொண்டுவந்ததன் பின்னணியில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு நாட்டில் தொற்று வீதங்கள் அதிகரிப்பதை நாம் கண்டால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

ஏனென்றால், கொரோனா வைரஸ் மீண்டும் பிரித்தானியா முழுவதும் பரவுவதற்கான அபாயத்தை எங்களால் எடுக்க முடியாது என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.

ஆசிரியர் - Editor II