கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கனடா - டொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர் அவரது வீட்டுக்கு வந்ததாகவும், அவரது வீட்டின் முன்பாக வைத்தே இவரை சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாக காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொறொன்ரோ செய்தியை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இதை தெரிவிக்கின்றது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள தமிழ் மொழிலதிபருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டுவருதாகவும் தெரிகின்றது.

இது தொடர்பில்அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II