லொறியுடன் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

லொறியுடன் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு

பமுனுகம, உஸ்வெடகொய்யாவ பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த லொறி ஒன்று பின்னோக்கி நகர்ந்த போது லொறியிற்கும், ​லொறியினுள் பொருட்களை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்த கொன்கிரீடிற்கும் இடையில் நிறுவன ஊழியர் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் பலத்த காயமடைந்த ஊழியரை ராகமை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார். 

வத்தளை, ஹெந்தலை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor