2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவ​ரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் ஊடக பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று (23) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய மாலைத்தீவை சேர்ந்த பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 2.39 கிலோ கிராம் ஹெரோயின் 24.4 மில்லியன் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் - Editor