தமிழக பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்த அப்பாவி தாய்

தமிழக பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்த அப்பாவி தாய்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, தன்னுடைய வீட்டில் இருந்து அவரது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்த சிலநிமிடங்களில் துப்பாக்கிச்சூட்டிற்கு ஜான்சி(48) பலியாகியுள்ளார்.

காலை முதல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிலர் வீடு திரும்பிய நேரத்தில் பொலிஸ் வாகனம் திரேஸ்புரம் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், ஜான்சி தவிர மேலும் ஒரு இளைஞரையும் துப்பாகியால் சுட்டதாகவும் உள்ளுர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஜான்சியின் மரணத்தால் அவரது கணவர் ஜெயபாலன் மற்றும் அவரது 3 பிள்ளைகள் சோகத்தில் உள்ளனர். கலவரத்தால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிகிடக்கையில், பொலிசார் சென்றபின்னர் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர்.

அப்போதுதான், ஜெயபாலன் தனது மனைவியை தேடியபோது தெரியவந்தது ஜான்சி சுடப்பட்டு இறந்துவிட்டார் என்று, அவரின் தலையில் ஒரு பகுதி மற்றும் ஒரு கண் இல்லை. இதனால் பொலிசார் அருகில் இருந்து சுட்டுள்ளனர் என தெரியவந்துள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

ஜான்சியின் உடல் தற்போது அரசு பொது மருத்துவமனையில் உள்ளது. போராட்டத்தில் கலந்துகொள்ளாத அப்பாவி ஜான்சியை பொலிசார் சுட்டுக்கொன்றது அநியாயமான ஒன்று என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் - Editor