உயரும் தங்கத்தின் விலை!

உயரும் தங்கத்தின் விலை!

இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.5125-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ 41000க்கு விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43048 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து 70.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனை பார்த்த இந்தியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆசிரியர் - Editor II