பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் திரைப்படம் திரையில் எப்போது வெளிவரும் – அவரே கூறிய தகவல்

பிக்பாஸ் கவின் நடித்துள்ள லிஃப்ட் திரைப்படம் திரையில் எப்போது வெளிவரும் – அவரே கூறிய தகவல்

தான் நடித்து வரும் லிஃப்ட் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்திருப்பதாக நடிகர் கவின் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வினீத் வர பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவின். லிஃப்ட் திரைப்படத்தில் கவின் உடன் அம்ரிதா, காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

லிஃப்ட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டப்பிங் முடிவடைந்திருப்பதாக கவின் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம், திரையரங்குகள் திறந்த பின்னர் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor II