கோஹ்லி, தமன்னாவை கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

கோஹ்லி, தமன்னாவை கைது செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியையும் ட் நடிகை தமன்னாவையும் கைது செய்வதற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சூதாட்டத்துக்கு இளையோர் அடிமையாகி வருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், ஆன்லைன் சூதாட்ட அப்ஸை தடைசெய்ய உத்தரவிடவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இளையோரின் மூளைகளை சலவை செய்வதற்கு விராத் கோஹ்லி மற்றும் தமன்னா போன்ற நட்சத்திரங்களை ஒன்லைன் நிறுவனங்கள் பயன்படுத்துவதால் அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் அந்;த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக பணம் வாங்கிய இளைஞர் ஒருவர் அதை மீள செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட விடயத்தையும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு;ளளார்.

மேலும் தமிழ் நாட்டில் ஆன்லைன் சூதாதட்டத்தில் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தை இழந்த இளையோர் பலர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் கோடிட்டுகாட்டியுள்ளார்.

அதிக வட்டிக்கு பணத்தை வாங்கும் இளையோர் ஆன்லைன் சூதாட்ட நிலையங்களில் பணத்தைக் கட்டிவிட்டு அதனால் இலாபாம் பெறமுடியாமல் போனால் தற்கொலை செய்வதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்லைனில் இடம்பெற்று வரும் புளூ வேல் விளையாட்டுக்கு அடியாமையான பல இளையோர் தற்கொலை செய்துகொண்டுள்ளதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஆசிரியர் - Editor II