உதவி கேட்ட மனைவியை உதாசினப்படுத்திய கணவர்... பரிதாபமாக பலியான உயிர்

உதவி கேட்ட மனைவியை உதாசினப்படுத்திய கணவர்... பரிதாபமாக பலியான உயிர்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தனது கணவரிடம் உதவி கேட்டு அவர் செய்ய மறுத்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியை சேர்ந்த ஹரி கணேஷ்(29) பிரியதர்ஷினி(29) இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

ஹரி கணேஷ் அம்பத்தூரிலும், பிரியதர்ஷினி நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கியில் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு காரணமாக இருவரும் விருகம்பாக்கத்தில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து, பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரியும் போது கணவர் ஹரிகணேஷிடம், பணியின் காரணமாக உதவி கேட்டதாகவும், ஆனால் கணவர் கணேஷ் உதவி செய்ய மறுத்துள்ளதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்பு பிரியதர்ஷினி தூங்குவதற்காக தனி அறைக்கு சென்ற நிலையில், காலையில் வெகுநேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த ஹரி கணேஷ் கதவை உடைத்து பார்த்த போது தூக்கிட்டு சடலமாக காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் வேலைப்பளு காணரமாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகும் நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II