கலங்கி தவித்த ஏழை மாணவி... திடீரென பார்சலில் வந்த சர்ப்ரைஸ்!

கலங்கி தவித்த ஏழை மாணவி... திடீரென பார்சலில் வந்த சர்ப்ரைஸ்!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் போன் இல்லாமல் கஷ்டப்பட்டவருக்கு பிரபல நடிகை அளித்துள்ள சர்ப்ரைஸ் அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

பி.யூ.சி தேர்வில் 94% மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவிக்கு படித்து மருத்துவர் ஆவது தான் லட்சியம்.

ஏற்கெனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்து இருப்பதால் மொபைல் போன் வாங்க வழியின்றி தவித்திருக்கிறார்.

இந்த சம்பவம் மீடியா வெளிச்சத்துக்கு வர, இதைப்பார்த்த நடிகை டாப்ஸி பன்னு அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வாங்கி அனுப்பி வைத்துள்ளார். இந்த மொபைலை பார்த்த மாணவி அதிர்ச்சியில் திக்குமுக்காடி நிலைக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி, ''டாப்ஸி மேடம் அனுப்பிய போன் எனக்கு கிடைத்தது. அது ஐபோன் என்னால் நம்பவே முடியவில்லை. இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சிப்பேன். உங்களது ஆசீர்வாதம் எனக்கு தேவை,'' என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II