திருடப்பட்ட வங்கி அட்டையில் 140,000 ரூபாய் பெற்ற இளைஞன்!

திருடப்பட்ட வங்கி அட்டையில் 140,000 ரூபாய் பெற்ற இளைஞன்!

திருடப்பட்ட வங்கி அட்டையின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தினை பெற்ற நபரொருவர் கேகாலை, பிந்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிந்தெனிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிக்கு அமைய 26 வயதுடைய குறிந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேநபரால் வீடொன்றில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் வங்கி அட்டையொன்றும் திருடப்பட்டுள்ள நிலையில், குறித்த வங்கி அட்டையில் இருந்து 140000 ஆயிரம் ரூபாவினை பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (31) கேகாலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

ஆசிரியர் - Editor II