சுவிட்சர்லாந்தில் நான்கு வயது பிள்ளையுடன் மாயமான தந்தை!

சுவிட்சர்லாந்தில் நான்கு வயது பிள்ளையுடன் மாயமான தந்தை!

சுவிட்சர்லாந்தில் ஜூன் மாத இறுதியில் இருந்து 4 வயது சிறுவனுடன் மாயமான தந்தை தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் திங்களன்று அறிக்கை வெளியிட்ட Zug பொலிசார், 36 வயது நபரும் அவரது நான்கு வயது மகனும் ஜூன் 27 முதல் மாயமாகியுள்ளனர்.

இறுதியாக ஜூன் 27 அன்று பகல் 9 மணியளவில் Steinhausen பகுதியில் இருவரும் காணப்பட்டதாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துவந்த அந்த நபர், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாயாரின் மேற்பார்வையில் வாழ்ந்து வந்த சிறுவனை, அந்த தந்தை அழைத்துச் சென்ற நிலையில், இதுவரை குடியிருப்புக்கு திரும்பவில்லை.

தமது நான்கு வயது மகனை காணவில்லை என தாயாரே பொலிசாரை நாடியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு எந்த துப்பும் சிக்காத நிலையில், தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தந்தை மற்றும் மகன் காணாமல் போனதிலிருந்து, ஜுக் பொலிசார் அவர்களின் சுற்றுப்புறங்கள் உட்பட விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மாயமான ஹல்மத் அலி அஜீஸ் 1.75 மீற்றர் உயரமும், மெலிந்த உடல் அமைப்பும், வெளிர் நிறமும், வழுக்கை உடையவர் எனவும் பொதுவாக தாடி வைத்திருப்பவர் எனவு பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II