'சுதந்திரம்,சமத்துவம்,சுவிட்சர்லாந்து தெரிவு செய்யும் புதிய ஆங்கில மொழி ,தேசிய கீதம்

'சுதந்திரம்,சமத்துவம்,சுவிட்சர்லாந்து தெரிவு செய்யும் புதிய ஆங்கில மொழி ,தேசிய கீதம்

சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய கீதத்தின் புதிய ஆங்கில பதிப்பை, 30 பேர் கொண்ட நடுவர் குழுவும், 24,000 க்கும் மேற்பட்ட மக்களும் வாக்களித்ததன் மூலம் தெரிவு செய்தனர்.

ஒரு போட்டி மூலம் தெரிவு செய்வதற்கு அறிவிக்கப்பட்ட போது, 200 க்கும் மேற்பட்ட பதிப்புகள் இப்போட்டிக்காக வந்திருந்தன. இவற்றில் ஆன்லைன் வாக்காளர்களில் அதிகமானோரும், நடுவர்களில் இருவரும் வாக்களித்த பாடல் தெரிவு செய்யப்பட்டது.

சுவிஸ் கலைஞரான வெர்னர் விட்மர் எழுதிய அப்பாடல் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டு அதற்கான பரிசுத் தொகையாக 10,000 பிராங்க் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகையை ஒரு சமூக அமைப்புக்கு விட்மர் வழங்கினார். தேர்ந்தெடுக்கபட்ட இந்தப் பாடலை, சுவிட்சர்லாந்தின் 500,000 பூர்வீக ஆங்கிலம் பேசும் குடியிருப்பாளர்கள், தாங்கள் தாய்மொழியில் பாடி, சுவிஸ் தேசிய தினத்தை கொண்டாட முடியும்.


‘ஒயிட் கிராஸ் ஆன் எ ஷைனிங் ரெட்’, “அரசியலமைப்பு முன்னுரையின் அத்தியாவசிய மதிப்புகளை வெர்னர் விட்மர் பாடல் வசனத்தில் கொண்டிருப்பதால் தேர்வு செய்யப்பட்டது " எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப்பாடல் சுவிஸின் உத்தியோகபூர்வ சுவிஸ் கீதத்தை மாற்றவில்லை. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சுவிஸ் மக்களும் வெர்னர் விட்மரின் புதிய பாடல் வரிகள் மூலம் எளிதாக அடையாளம் காண முடியும்.

இன்று சுவிஸ் தேசிய தினம் ( ஆகஸ்ட் 1) !

https://m.youtube.com/watch?feature=emb_title&v=bQRImwYqcvs

ஆசிரியர் - Editor II