யேர்மனி வூப்பெற்றாலில் உணர்வுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வு.

யேர்மனி வூப்பெற்றாலில் உணர்வுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வு.

1.8.2020 சனிக்கிழமை இன்று யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.கொரோனா கொள்ளை நோயின் தாக்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வணக்க நிகழ்வுகளில் அன்னை பூபதியம்மா உள்ளிட்ட நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வும், மற்றும் கரும்புலிகள் நாள், கறுப்பு யூலை போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நினைவு வணக்க நிகழ்வு என்ற தலைப்பில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கொரோனா சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் அணிதிரண்டு மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர். தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் இசைவணக்கம், விடுதலை நடனங்கள்,பேச்சு, சிறப்புரை, என்பன இடம்பெற்றன. இறுதியில் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

 

ஆசிரியர் - Editor II