பிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை

பிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை

பிரான்சில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக இரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கன மழை பெய்ததால், திடீரென்று இரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் இரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பார்ப்பதற்கு ஆறுகள் போன்று காட்சியளித்துள்ளன.

இங்கு கொட்டி தீர்த்த மழை, அதன் பின் தெற்கு பிரான்சிலும் கொட்டி தீர்த்ததால், அங்கிருக்கும் பயிர்கள் முற்றிலும் நாசமாகியுள்ளன.

மேலும் இந்த கனமழை காரணமாக இரயில் நிலையத்தில் பயணிகள் கையில் தங்களுடைய காலணிகளை எடுத்துக் கொண்டு நடந்து சென்றுள்ளனர்.

வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் வரும் வெள்ளிக் கிழமை வரை பாரிசில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor