கனடாவில் உள்ள உணவகம் ஒன்றின்மீது குண்டு வெடிப்பு

கனடாவில் உள்ள உணவகம் ஒன்றின்மீது குண்டு வெடிப்பு
கனடாவில் Ontario மாகாணத்தில் உள்ள Mississauga என்ற பகுதியில் இருக்கும் இந்திய உணவகம்  ஒன்றில் திடீரென்று குண்டு வெடித்ததால் 15 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் 3 பேர் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 10.32 மணிக்கு நடந்ததுள்ளதாகவும், சம்பவத்தை அறிந்தவுடன் பொலிசார் மற்றும் ஆம்புலன்சுகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உணவகத்திற்கு சீல் வைத்துள்ள பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

உள்ளூர் ஊடகம் ஒன்று உணவகத்திற்கு வந்த இரண்டு பேர் கையில் வெடிகுண்டுடன் வந்திருப்பதாகவும், அவர்களே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor