ஃபெமினிலி டி பலேர்மோ: பியோனா ஃபெரோ சம்பியன்

ஃபெமினிலி டி பலேர்மோ: பியோனா ஃபெரோ சம்பியன்

பெண்களுக்கே உரித்தான ‘ஃபெமினிலி டி பலேர்மோ’ பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடரின், மகுடத்துக்கான பரபரப்பான இறுதிப் போட்டியில், பிரான்ஸின் பியோனா ஃபெரோ வெற்றிபெற்று சம்பியாகியுள்ளார்.

இரசிர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், பிரான்ஸின் பியோனா ஃபெரோ, எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவிட்டை எதிர்கொண்டார்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை பியோனா ஃபெரோ 6-2 என எளிதாகக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பியோனா ஃபெரோவுக்கு அனெட் கொன்டாவிட் கடும் நெருக்கடி கொடுத்தார்.

எனினும், மனம் தளராது சிறப்பாக விளையாடிய பியோனா ஃபெரோ, இரண்டாவது செட்டை 7-5 என போராடிக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆசிரியர் - Editor II