தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொலிண்டேல் மக் டெனால்ஸ் அருகே கத்திக் குத்து

தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொலிண்டேல் மக் டெனால்ஸ் அருகே கத்திக் குத்து

லண்டன் கொலிண்டேல் பகுதில் உள்ள மக் டெனால்ஸ்சுக்கு அருகே உள்ள ஒரு ஒழுங்கையில் வைத்து, 20 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் தனது உயிரைக் காப்பாற்ற, மக் டெனால்ஸ்சுக்குள் ஒடி வந்து தஞ்சம் புகுந்த நிலையில். அங்கே உணவருந்திக்கொண்டு இருந்த பலர் அதிர்சியடைந்துள்ளார்கள்.

அவர்கள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கே 7 கார்களில் வந்த பொலிசார் குறித்த இடத்தை உடனே லாக் டவுன் செய்து. தடயங்களை தேடி வருவதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஹரி என்னும் ஈழத் தமிழர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார். நேற்று(10) மாலை 6.40 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் உயிருக்கு போராடி வருவதாக அறியப்படுகிறது.

கத்திக்குத்துக்கு உள்ளான நபர் யார் என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

ஆசிரியர் - Editor II