பெண்ணைக் கடத்திய சந்தோஷ்குமார் அதிகாலையில் கைது! - அவர் மீது 7 குற்றச்சாட்டுகள்.

பெண்ணைக் கடத்திய சந்தோஷ்குமார் அதிகாலையில் கைது! - அவர் மீது 7 குற்றச்சாட்டுகள்.

ரொறன்டோவில் நேற்று மாலை பெண் ஒருவரைக் காரில் கடத்திச் சென்றதாக தேடப்பட்டு வந்த சந்தோஷ்குமார் செல்வராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 7 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Neilson வீதி, Mclevin Avenue பகுதியில் நேற்று மாலை 5.41 மணியளவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டார் என்று கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்ற 34 வயதுடைய, சந்தோஷ்குமார் செல்வராஜா என்பவரை ரொறன்ரோ பொலிசார் தேடிவந்தனர்.

கடத்தப்பட்ட பெண், காயங்களுடன் நேற்றிரவு 10 மணியளவில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஸ்காபரோ பகுதியில் சந்தோஷ்குமார் இன்று அதிகாலை 1.39 மணியளவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக, துன்புறுத்தல், ஆட்கடத்தல், பலவந்தமாக தடுத்து வைத்தல், தாக்குதல் நடத்தியமை, உடலுக்கு தீங்கிழைக்கும் வகையில் தாக்கியமை, நன்நடந்தை மீறலின் இரண்டு பிரிவுகளின் கீழ், ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர், இன்று காலை 10 மணிக்கு, 1911 Eglinton Avenue East,நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.

ஆசிரியர் - Editor