ஐபிஎல்-ல் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் 27 வயது இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை!!

ஐபிஎல்-ல் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் 27 வயது இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை!!

ஐபிஎல்-ல் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் மும்பையைச் சேர்ந்த 27 வயதான இளம் கிரிக்கெட் வீரர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பரிக்க வீரர் டேல் ஸ்டெயின் போன்ற தோற்றத்திற்காகவும், அவரை போல பந்து வீசுவதால் ‘மும்பையின் டேல் ஸ்டெய்ன்’ என்று அழைக்கப்பட்ட 27 வயதான மும்பை கிளப் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி, திங்கள்கிழமை இரவு மலாட்டில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கரண் உதய்பூரில் உள்ள தனது நண்பரை அழைத்து தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

அதே நகரத்தில் வசிக்கும் கரணின் சகோதரிக்கு அவரது நண்பர் தகவல் கொடுத்துள்ளார். அவரது சகோதரி தனது தாய்க்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆனால் அதற்குள் மிகவும் தாமதமாகியுள்ளது.

மருத்துவமனையை அடைவதற்கு முன்பு கரண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று குடும்ப வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

எட்டு ஐபிஎல் அணிகளில் ஏதேனும் ஒன்றில் கூட விளையாட வாய்பபு கிடைக்காததால் கரண் திவாரி உயிரை மாய்த்துக்கொண்டதாக அவரது நண்பர் ஒருவர் கூறினார்.

கரண் சவனீர் கிரிக்கெட் கிளப் மற்றும் யுனைடெட் பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றிற்காக விளையாடியுள்ளார், மேலும் பயிற்சியில் ஈடுபடும் மும்பை மூத்த வீரர்களுக்கு கரண் திவார் பந்து வீசுவாராம்.

விபத்தினால் இறந்ததாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், சம்பவம் குறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளனர்.


ஆசிரியர் - Editor II