செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா!

செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்ரேலியா!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் ஜூலை மாதம் நடைபெறவிருந்தபோதும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான தொடர் இங்கிலாந்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளமையினால் செப்டம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, செப்டம்பர் 4, செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய திகதிகளில் சவுத்தம்ப்டனில் மூன்று இருபதுக்கு இருப்பது போட்டிகளை நடத்தவும் செப்டம்பர் 11, செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளை மான்செஸ்டரில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் குழாம் எதிர்வரும் 24 ஆம் திகதி இங்கிலாந்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II