கனடாவில் சிறுவர், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் சிறையில் மரணம்!

கனடாவில் சிறுவர், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் சிறையில் மரணம்!

கனடாவில் சிறுவர், சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் சிறையிலேயே உயிரிழந்துள்ளார்.

New Brunswicklல் உள்ள சிறையில் தான் Donald Duane Bartlett (51) என்ற குற்றவாளி உயிரிழந்தார்.

Donald Duane Bartlett மீது 30 ஆண்டுகால வழக்குகள் நிலுவையில் உள்ளது.

முக்கியமாக இளம்பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளிடம் மிக மோசமாகவும், தவறாகவும் நடந்த குற்றத்துக்காகவே Donald Duane Bartlett கைது செய்யப்பட்டார்.

பின்னர் சிறையில் இருந்து கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பின்னரும் திருந்தாத Donald Duane Bartlett நபர் ஒருவருடன் சேர்ந்து ஓன்லைன் மூலம் சிறார்களிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019 ஜனவரி கைது செய்யப்பட்ட Donald Duane Bartlett அடுத்த மாதமே ஜாமீன் கோரிய நிலையில் நிராகரிக்கப்பட்டது.

அவர் மீதான வழக்கு விசாரணை வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் Donald Duane Bartlett இயற்கையான முறையில் மரணம் அடைந்துள்ளதாக கனடாவின் Correctional Service சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II