ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி?

ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி?

ஜேர்மனியில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜேர்மனியின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் ஆறிற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதைக் காட்டியுள்ளன என ஜேர்மனியின் Paul Ehrlich Institute தலைவரான கிளாஸ் சிச்சுடெக் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சோதனைகளின் தரவு தடுப்பூசிகள் பயனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் காட்டினால், முதல் தடுப்பூசிகள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II