கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி சிறப்பான வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி சிறப்பான வெற்றி!

கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ஜமைக்கா தலாவாஸ் அணியும் சென்.லுசியா ஸூக்ஸ் அணியும் மோதின.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜமைக்கா தலாவாஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சென்.லுசியா ஸூக்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரொஸ்டன் சேஸ் 52 ஓட்டங்களையும், நஜிபுல்லா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், பெர்மோல் மற்றும் முஜிப் தலா 2 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல் மற்றும் லெமச்சேன் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஜமைக்கா தலாவாஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஜமைக்கா தலாவாஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அஸிப் அலி ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதில் சென்.லுசியா ஸூக்ஸ் அணியின் பந்துவீச்சில், கெஸ்ரிக் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஸ்கொட் குக்லைஜன், ஒபேட் மெக்கோய் மற்றும் ராகீம் கோன்வோல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அஸிப் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசிரியர் - Editor II