2020 ஐபிஎல் தொடரில் இலங்கை நட்சத்திரம் லசித் மலிங்கா விளையாடுவதில் சிக்கல்!

2020 ஐபிஎல் தொடரில் இலங்கை நட்சத்திரம் லசித் மலிங்கா விளையாடுவதில் சிக்கல்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா 2020 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ள 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் திகதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் தனிப்பட்ட காரணங்களால் 2020 ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளை அவர் தவறவிடுவார் என கூறப்படுகிறது.

மலிங்காவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு எதிர்வரும் வாரங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்க தந்தையுடன் இருக்க விரும்புவதாகவும், மேலும் கொழும்பில் பயிற்சி பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் 37 வயதாகும் மலிங்கா, இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் போது கடைசியாக டி-20 போட்டியில் இலங்கைக்காக விளையாடினார்.

தற்செயலாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கை கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாம்களில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II