முன்னாள் காதலர்களைப் பழிவாங்கிய பெண்

முன்னாள் காதலர்களைப் பழிவாங்கிய பெண்

தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு போலியாக “ஆந்தராக்ஸ் பவுடர்” அனுப்பி டார்ச்சர் செய்துள்ளாள்.

அவளால் இத்தனை பேருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொது மக்களுக்கும் பொலிசாருக்கும் ஏற்பட்ட இடையூறு ஆகியவற்றிற்காக 15 குற்றச்சாட்டுகள் அவள் மீது சுமத்தப்பட்டதோடு சிறைத்தண்டனை மட்டுமல்லாது மன நல காப்பகத்திலும் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கனடாவின் Saskatoon பகுதியைச் சேர்ந்தவள் Alexa Emerson (33). ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு பெண் இந்த சம்பவங்களுக்கெல்லாம் பின்னணியில் இருப்பது தான்தான் என்று கூறும் ஒரு வீடியோ வெளியானது.

அவளைப் பிடித்து விசாரித்ததில் அவள் ஒரு அமெரிக்க நடிகை என்றும் அவள் நடிப்பதாக எண்ணிக்கொண்டு கெமரா முன் பேசியது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் Alexa Emerson சிக்கினாள். அவளை விசாரித்தபோது தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் தொல்லை கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவள் உருவாக்கிய பிரச்சினைகளால் அவசர அழைப்புகளுக்கு இணங்க செயல்பட்ட பொலிசார், மருத்துவ குழுக்கள் என அரசுக்கு 200,000 டொலர்கள் செலவு ஏற்பட்டது.

அவளுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவள் மன நலம் பாதிக்கப்பட்டவளாகத்தான் இருக்க முடியும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்குப் பின்னர் மன நலக் காப்பக சிகிச்சையும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor