4 வயது குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய அகதி

4 வயது குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய அகதி

பிரான்சில் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தொங்கிய 4 வயது குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய அகதிக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை அளித்து சிறப்பு செய்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் 4 வயது குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் தொங்கியபடியே உதவி கேட்டு அழுதுள்ளது.

இந்த நிலையில் மாலி நாட்டவரான Mamoudou Gassama என்ற அகதி நொடி நேரத்தில் ஸ்பைடர் மேன் போல் குதித்துச் சென்று அந்த குழந்தையை காப்பாற்றினார்.

????????????VIDÉO - Un homme a escaladé à mains nues la façade d'un immeuble hier après-midi dans le 18ème à #Paris pour secourir un petit garçon de 4 ans accroché à un balcon. (Snapchat) pic.twitter.com/xTHvHJQD1D

— Brèves de presse (@Brevesdepresse) May 27, 2018

இச்சம்பவம் பிரான்ஸ் முழுக்க ஒட்டு மொத்த மக்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டுகளும் குவிந்தது.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தை அடுத்து குறித்த இளைஞரை இன்று நேரில் வரவழைத்து பாராட்டிய ஜனாதிபதி மேகரோன் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பிரான்ஸ் குடியுரிமையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளதுடன் பாரிஸ் நகர தீயணை மற்றும் மீட்பு துறையில் வேலையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இளைஞரை பாரிஸ் நகர மேயர் Anne Hidalgo வெகுவாக பாராட்டியதுடன், துணிச்சலுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Gassama-வின் தீரச் செயல் ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor